கொத்து ரொட்டி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரொட்டிக்கு:

கோதுமை மா அல்லது மைதா மா - 3 கப்

பட்டர் மில்க் - 1/2 கப்

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

எண்ணை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

பிரட்டலுக்கு:

உருளைக்கிழங்கு - 3 சிறியது

தக்காளி - 2 சிறியது

வெட்டிய கோஸ்,கரட் கலவை - 1 கப்

வெட்டிய காலிஃபிளவர் - 1/2 கப்

ஊறவைத்த சோயாமீற் - 1/2 கப்

அவித்த கடலை - 1 கப்

வெங்காயம் - 1 பெரியது

உள்ளி - 15 பல்லுகள்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 1 அங்குல துண்டு

கராம்பு - 4

ஏலம் - 3

கறுவா - 2 அங்குல துண்டு

கடுகு - சிறிது

பெரிய சீரகம் - சிறிது

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லித்தழை - சிறிது

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கு, தக்காளி, ஊறவைத்த சோயாமீற்றை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வெங்காயம், உள்ளி, பச்சை மிளகாய் என்பவற்றை நீளமான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

கராம்பு, ஏலம், கறுவா என்பவற்றை வறுத்து பொடியாக்கி வைக்கவும்.

வெட்டிய காலிஃப்ளவரில் சிறிது உப்பு போட்டு கலந்து மூடி மைக்ரோவேவில் 4 நிமிடங்களுக்கு அல்லது ஆவியில் வைத்து அவித்து எடுக்கவும். (தண்ணீர் விட தேவை இல்லை)

கோதுமை அல்லது மைதா மாவில் உப்பு, பேக்கிங் பவுடர், பட்டர் மில்க், தண்ணீர் சேர்த்து சிறிது தடிப்பான தோசை மாவு பதத்திற்கு குழைக்கவும்.

பின்னர் தோசைக்கல்லில் சிறிது தடிப்பான தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

இவை சிறிது ஆறியதும் ஒரு அங்குல துண்டுகளாக கத்தியால் வெட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பெரிய சீரகம், நீளமாக வெட்டிய வெங்காயம், உள்ளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உருளை, சோயாமீற் என்பவற்றை போட்டு வதக்கவும்.

பின்னர் அவித்த கடலை, அவித்த காலிஃபிளவர், கோஸ்,கரட் கலவையை சேர்த்து வதக்கவும்.

கலவை ஓரளவு வதங்கியதும் 1 கப் நீர் விட்டு மூடி அவிய விடவும்.

பின்னர் வெட்டிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் அவிய விடவும்.

கலவை நன்கு அவிந்து ஓரளவு நீர் வற்றியதும் குறுணலாக வெட்டிய இஞ்சி சேர்த்து கிளறவும்.

கலவை நன்கு நீர் வற்றி சுருண்டதும் பொடியாக்கிய ஏல கலவையை போட்டு கிளறி மூடி 2 நிமிடங்கள் மெல்லிய நெருப்பில் வைக்கவும்.

பின்னர் வெட்டிய தோசைத் துண்டுகளை கொட்டி கறியுடன் சேரும்வரை நன்கு கிளறவும்.

சுவையான கொத்து ரொட்டி தயார். இதனை பரிமாறும் தட்டில் கொட்டி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: