கொத்து பரோட்டா (2)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பரோட்டா - 3

வெங்காயம் - 2

தக்காளி - 1

முட்டை - 3

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - தேவையான அளவு

மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி

மிளகாய்ப் பொடி- 1/2 தேக்கரண்டி

சீரகப் பொடி- 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு, பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

பின் வெங்காயத்தை சேர்க்கவும்

அதனுடன் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும். இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.

பின்னர் அதனுள் பொடித்து வைத்துள்ள பரோட்டாவையும் போட்டு கிளறவும்.

அதன் மேல் முட்டையை ஊற்றி மேலும் கிளறவும்.

குறிப்புகள்: