கொத்து சப்பாத்தி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி ( மிகவும் பொடித்தாக நறுக்கிக் கொள்ளவும்) - 4

போன் லெஸ் சிக்கன்(உப்பு போட்டு வேகவைத்தது) - 50 கிராம்

முட்டை - 2

பெரிய வெங்காயம் (மிகவும் பொடிதாக நறுக்கியது) - 1 1/2

தக்காளி (மிகவும் பொடிதாக நறுக்கியது) - 1 1/2

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை (மிகவும் பொடிதாக நறுக்கியது) - 1 இனுக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.

வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் வதக்கி பின் தக்காளி போடவும்.

நன்றாக வதக்கி பேஸ்ட் போல் ஆகும் போது, சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் , மிளகாய் தூள் ஆகியவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கைவிடாமல் கிளறவும். பின் வேகவைத்த சிக்கனை சேர்க்கவும்.

நறுக்கிய சப்பாத்தியில் தண்ணீரை ( 2 கை அளவு ) தெளித்து எல்லா சப்பாத்தி பீஸீன் மீது படும் படி கலந்து விடவும். ( இது சப்பாத்தி சாப்பிடும் போது மெதுவாக இருக்க உதவும்)

வாணாலியில் உள்ள கலவையிலும் ஒரு கை தண்ணீர் தெளித்து நறுக்கிய சப்பாத்தியை போடவும்.

உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கி சூடாக பறிமாறவும். (ஆறினால் நன்றாக இருக்காது).

குறிப்புகள்: