கொத்து இடியாப்பம்
0
தேவையான பொருட்கள்:
அவித்த இடியாப்பம் - 3
தக்காளி - 1
வெங்காயம் - 1.
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தாளிக்க - தேவையான எண்ணெய்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பின்னர் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.
அடுத்து சிறிது உப்பு போட்டு கிளறி விட்டு உதிர்த்த இடியாப்பத்தை போட்டு கிளறி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதில் வெங்காயம் வதங்கும் போது ஒரு முட்டையும் ஊற்றி கிளறி இடியாப்பத்தை போட்டு கிளறினால் நன்கு சுவையாக இருக்கும்.