கொத்துக்கறி கீரை தோசை
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 2 கப்
கொத்துக்கறி - 250 கிராம்
அரைக்கீரை - 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சீஸ் - தேவையான அளவு
மல்லித்தழை - தேவையான அளவு
பட்டை - 1
கிராம்பு - 1
அன்னாசிப்பூ - 1
எண்ணெய் - 50 மி.லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொத்துக்கறியை நன்கு கழுவி பிழிந்து குக்கரில் போட்டு, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது போட்டு அரை கிளாஸ் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, வேகவைத்த கறியை போட்டு கிளறவும். அதில் கீரை சேர்த்து கிளறி தண்ணீர் வற்றியவுடன் சுருள கிளறி இறக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து தோசையை ஊற்றி அதன் மேல் கீரைக்கலவை போட்டு பரப்பி சுற்றிலும் எண்ணெய் விட்டு சிறு தீயில் வேகவைத்து எடுத்து துருவிய சீஸ் போட்டு கொத்தமல்லித் தழை தூவவும்.