கொத்தமல்லி புதினா தோசை
0
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 4 குழிக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி
பச்சை மிள்காய் - 2
நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
தோசை மாவோடு நறுக்கிய மல்லி, புதினா, பச்சை மிளகாய், வெங்காயம், தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசைக்கலத்தை காயவிட்டு சிறிது எண்ணெய் தடவி கலந்த தோசை மாவை தேவைக்கு விட்டு வட்டமாக பரத்தி, பரத்திய மாவின் மேல் சிறிது எண்ணெய் தெளித்து,மூடி விடவும். தோசை ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
இதற்கு தொட்டுக்கொள்ள எண்ணெய் கலந்த இட்லிப்பொடியே பொருத்தமாக இருக்கும்.