கேரட் பூரி (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
கேரட் - துருவியது - 1/2 கப்
இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்த விழுது - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
சீரகம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பூரி பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவுடன் துருவிய கேரட், அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சீரகம் சேர்த்துப் பிசைந்து பூரிகளாக இட்டுப் பொரிக்கவும்.