கேரட் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி (புழுங்கல்) - 1/2 கப்

பச்சரிசி - 1/4 கப்

துவரம் பருப்பு - 1/4 கப்

புளி - 1/4 எலுமிச்சை அளவு

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கேரட் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, துவரம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். கடலை பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.

ஊற வைத்த அரிசியுடன் துருவிய கேரட், சீரகம், மிளகு, உப்பு, புளி சேர்த்து 1/4 டம்ளர் நீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

தோசை மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.

ஊற வைத்திருந்த கடலை பருப்பை அரைத்த மாவுடன் கலந்து கொள்ளவும்.

மாவு புளிக்க தேவையில்லை, அரைத்த உடனேயே தோசையாக ஊத்தவும்.

குறிப்புகள்:

இதை வெங்காயம், தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.