கேப்பை புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேப்பை மாவு - 2 கப்

தண்ணீர் - 1/2 கப்

நாட்டுச்சர்க்கரை - 2 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

நிலக்கடலைப்பருப்பு - 1/2 கப்

உப்பு -தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவை எடுத்து அரைகப் தண்ணீரில்கரைத்த உப்பை அதில்தெளித்து கட்டி இல்லாமல் பிசறி கொள்ளவேண்டும்.

பின்பு அந்த மாவை இட்லி தட்டில் எடுத்துவைத்து நீராவியில் வேகவைக்கவேண்டும்.

10 நிமிடம் வேக வைத்து வெந்த உடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து ஆற விடவேண்டும்.

நிலக்கடலைப் பருப்பை மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து கேப்பை மாவுடன் கலந்து விடவேண்டும்.

அதனுடன் தேங்காய் துருவலையும் வெல்லத்தையும் கலந்து மொத்தமாக புரட்டி நன்கு கலந்தவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: