கேப்பை அல்லது ராகி மாவு புட்டு

on on on on on 5 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கேப்பை அல்லது ராகி மாவு - 1 கப்

வெல்லம் - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

செய்முறை:

கேப்பை மாவை தண்ணீரால் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து முழுவதையும் ஈரமாக்கவும்.

இந்த கலவையை சல்லடையால் சலித்து வைக்கவும்.

இதனை இட்லி தட்டில் துணி போட்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக பரத்தவும்.

இதை ஆவியில் வைத்து வேக வைக்கவும். வெந்தபின் எடுத்து தனியே வைக்கவும்.

இதனுடன் வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: