குழாய் புட்டு (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கப்
வெல்லம் - ருசிக்கேற்ப
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து புட்டு பதத்திற்கு கொண்டு வரவும்.
இதை ஜல்லடையில் ஈரத்துடனே சலித்து வைக்கவும்.
பின் குழாய் புட்டு செய்யும் குழாயில் முதலில் அரிசிமாவு பின் வெல்லம், தேங்காய் பின் அரிசிமாவு என்னும் விதத்தில் வைத்து வேக வைக்கவும். வெந்தபின் வெளியே எடுத்து கத்தியால் கட் செய்து பரிமாறலாம்.