கீமா இட்லி (1)
தேவையான பொருட்கள்:
இட்லி - 20 (சதுரமாக வெட்டி பொரித்து எடுக்கவும்)
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலாபொடி - 1 தேக்கரண்டி
தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு சீரகம் போட்டு, தாளிக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின்பு மஞ்சள்பொடி, ரசப்பொடி, சாம்பார் பொடி, கரம் மசாலாப் பொடி போட்டு கிளறவும்.
அடுத்து நறுக்கிய தக்காளியையும், உப்பையும் போட்டு சிறிது நீரையும் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் பொரித்த இட்லியை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லித்தழை தூவி பரிமாறவும்.