கிரிஸ்பி தோசை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

புழுங்கலரிசி - 1 கப்

உளுந்து - 1/4 கப்

கடலைப்பருப்பு - சிறிதளவு

வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பின்னர் கிரைண்டரில் போட்டு தோசைமாவு பதத்திற்கு பொங்கப் பொங்க அரைத்துக் கொள்ளவும். கடைசியில் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிட்டு மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

இந்த மாவை உடனடியாக தோசை வார்க்கலாம். ஒரு கரண்டி மாவை எடுத்து மிக மெல்லிய தோசையாக வார்த்து,

குறிப்புகள்:

இந்த தோசை மாவை மசால் தோசைக்கு உபயோகித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

சூடான சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.