கிட்ஸ் இட்லி ப்ரை
தேவையான பொருட்கள்:
இட்லி – 6
வெங்காயம் – 1
தக்காளி சாஸ் – 1/2 கப்
கடுகு - தாளிக்க
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மாசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி – 1/2 கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அவனை 400Fல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.
இட்லிகள் ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி எல்லா துண்டுகளிலும் படும்படி நன்கு பிரட்டி விடவும்.
பின்னர் இட்லி துண்டுகளை அவன் ட்ரெயில் வைத்து அடுக்கி முற்சூடு செய்த அவனில் 18 - 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சாஸை ஊற்றி கிளறி விடவும்.
அதன் பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மாசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும். அதனை 10 நிமிடம் வேக விடவும்.
அவனில் வைத்துள்ள இட்லி துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். எண்ணெயில் போட்டு பொரித்தது போலவே உள்பகுதியில் மென்மையாகவும், வெளிபகுதியில் மொறுமொறுவென்றும் இருக்கும்.
அவனிலிருந்து எடுத்த இட்லி துண்டுகளை மசாலா கலவையுடன் சேர்த்து 3 நிமிடம் கிளறி விடவும்.
இறுதியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.
குறிப்புகள்:
அவன் இல்லாதவர்கள் இட்லி துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்தும் சேர்க்கலாம்.
இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.