காலிஃப்ளவர் அடை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 2 டம்ளர்
பச்சரிசி - 2 டம்ளர்
கடலை பருப்பு - 3/4 டம்ளர்
துவரம் பருப்பு - 1/2 டம்ளர்
காலிஃப்ளவர் (சிறியது) - 1
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1/4 மூடி
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - சிறிது
கொத்துமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது.
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை வெந்நீரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் அமிழ்த்தி வைக்கவும்.
பின்னர் வெளியே எடுத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரை சுத்தமாக வடித்து வைக்கவும்.
புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு கிரைண்டரில் போட்டு, மிளகாய், தனியா, சோம்பு, பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து ரவை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும். மாவை எடுக்கும் முன் நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து இரண்டு ஓட்டு ஓட்டி வழிக்கவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், எல்லாவற்றையும் வதக்கி மாவில் கொட்டி, நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து, சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றி எண்ணெய் விட்டு, திருப்பி வேக விட்டு எடுக்கவும்.