கார பருப்பு புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பயத்தம் பருப்பு (அல்லது) முழு பச்சைபயறு - 300 கிராம்

முற்றிய தேங்காய் - 1

கடலைப்பருப்பு - 150 கிராம்

முந்திரிப்பருப்பு - 7

இஞ்சி - 50 கிராம்

பச்சை மிளகாய் - 10

கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு

சின்ன வெங்காயம் - 15

கடுகு - 2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 5 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

காயநீர் - 2 தேக்கரண்டி

எலுமிச்சம் பழம் - 1

நெய் - 2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 50 மில்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் நீரில் ஊறவைத்து 2 மணிநேரம் கழித்து உப்பு போட்டு நன்றாக பூக்க அரைத்து இட்லி தட்டில் ஈரத்துணியில் இட்லியாக அவிக்க வேண்டும்.

அவிந்ததும் இறக்கி நன்கு ஆற விட்டு பூப்போல் உதிர்க்கவும். பூப் போல் உதிர்க்க காரட் சீவும் ஸ்க்ராப்பரில் இட்லிகளை துருவலாம்.

ஒரு வாணலியில் நெய், சமையல் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, உடைத்த முந்திரி, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை மிளகாயை நறுக்கி பிளந்துச் சேர்க்கவும்.

முந்திரியை கடைசியாக வறுக்கவும். அத்துடன் தேங்காயைச் சேர்க்கவும்.

வெங்காயம் விரும்பினால் சேர்க்கலாம். வெங்காயம் சேர்த்தால் காயநீர் தேவையில்லை.

தேங்காய் வறுபட்டு மணம் வந்ததும் துருவிய பருப்பு சேர்த்து புரட்டவும்.

பருப்பு வாசனை வந்ததும் இறக்கி கொத்தமல்லி சேர்க்கவும்.

சூடு சற்று ஆறியதும் எலுமிச்சை பழத்தை விதை நீக்கி உப்பிட்ட பாத்திரத்தில் பிழிந்து புட்டில் சேர்க்கவும்.

குறிப்புகள்: