கார தோசை ( 1)
0
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாவில் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் இவற்றை போட்டு கலக்கிக்கொள்ளவும்
காய்ந்த மிளகாய் மற்றும் சோம்பு இரண்டையும் அரைத்து ஊற்றவும்.
பிறகு தோசையாக வார்க்கவும்.
குறிப்புகள்:
தொட்டுக் கொள்ள மிளகாய் பொடி, மாசி சம்பல், சாம்பார் நன்றாக இருக்கும்.