கார சப்பாத்தி

on on off off off 4 - Ok!
2 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்

கார்ன்ப்ளார் - 2 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

கொத்தமல்லி - 1/4 கப்

பச்சை மிளகாய் - 8

சீரகம் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீர்விடாமல் இடித்துக்கொள்ளவும் (மிக்ஸியில் என்றால் ஒரு சுற்று மட்டும்)

ஒரு பாத்திரத்தில் மாவு, கரம்மசாலா, உப்பு, இடித்து வைத்துள்ள கலவை சேர்ந்த்து வெதுவெதுப்பான நீரில் பினைந்துக்கொள்ளவும்

பின் காற்றுபுகாத டப்பாவில் மூடிவைத்து அரைமணிநேரம் ஊற விடவும்

சிறுசிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் திரட்டி சிறு அளவு எண்ணெயில் சுட்டு எடுக்கவும்

குறிப்புகள்: