கார குழி பணியாரம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 ஆழாக்கு

புழுங்கலரிசி - 1 ஆழாக்கு

உளுந்து - 1/2 ஆழாக்கு

பச்சை மிளகாய் - 2

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

வெங்காயம் (நடுத்தர அளவு) - 2

மல்லித்தழை - சிறிது

தயிர் - 1/4 கப்

சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் ஒன்றாக ஊறவைக்கவும்

உளுந்தை தனியாக ஊறவைக்கவும்

முதலில் ஊளுந்தை நன்கு நுரைக்க அரைத்து எடுக்கவும்

பிறகு அரிசியை பச்சைமிளகாய் சேர்த்து மெல்லிய ரவை போன்ற பதத்திற்கு அரைக்கவும்

கடைசியில் உப்பு சேர்த்து இரண்டு மாவுகளையும் ஒன்றாக கலந்து மறுநாள் காலை வரை புளிக்க விடவும்

மறுநாள் ஊறவைத்த கடலைபருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தயிர், மற்றும் சமையல் சோடா சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்

பணியாரக்கல்லில் எண்ணெய் விட்டு சூடாக்கி ஊற்றவும்

குறிப்புகள்: