கார இடியாப்பம்





3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
கொதிக்கும் தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இனுக்கு
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 3
செய்முறை:
பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை ஊற்றி நன்கு பிசைந்து பிழிவதில் போட்டு இடியாப்பமாக இட்லி தட்டில் பிழிந்து அதை வேகவைக்கவும்.
வெந்தபின் எடுத்து தனியே உதிர்த்து வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து பின் கடலை பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் உதிர்த்த இடியாப்பத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி தேங்காய் துருவல் போட்டு ஒரு வதக்கு வதக்கவும். அப்படியே சூடாக சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும்.