காரட் புட்டு
0
தேவையான பொருட்கள்:
காரட் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கடலை மாவு - 50 கிராம்
கார்ன் ப்ளோர் - 25 கிராம்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
தேங்காய் துருவல் - 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரட், வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, காரட், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும், கடலை மாவு, கார்ன் ப்ளோர் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெந்ததும் இறக்கி தேங்காய்த்துருவல், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.