காய்கறி ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமைமா (மைதாமா) - 500 கிராம்

பால் - 1 மேசைக்கரண்டி

பட்டர் - 1 மேசைக்கரண்டி

கொதிநீர் - 1 அல்லது 2 கப்

சிறிது சிறிதாக வெட்டிய பெரிய வெங்காயம் - 1

சிறிது சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 3

றிது சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - சிறிதளவு

சிறிய மெல்லிய வட்டமாக வெட்டிய லீக்ஸ் - 25 கிராம்

துருவிய கேரட் - 25 கிராம்

சிறிய மெல்லிய வட்டமாக வெட்டிய பீன்ஸ் - 25 கிராம்

சிறிது சிறிதாக வெட்டிய முட்டைகோஸ் - 15 கிராம்

சிறிய தக்காளிப்பழம் சிறிது சிறிதாக வெட்டியது - 1

உருளைக்கிழங்கு (துருவியது) - 1

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமைமா, உப்பு, பால், பட்டர், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, லீக்ஸ், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், தக்காளிப்பழம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

அதன் பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும். குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணெய் தடவவும். அதன் பின்பு வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும்.

அது வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும். இருபக்கமும் வெந்ததும் சுவையான, மென்மையான ரொட்டி தயராகி விடும்.

குறிப்புகள்: