காய்கறி முட்டை தோசை
0
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 2 குழிகரண்டி
முட்டை - 1
மீதமான காய்கறி பொரியல் - 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
மீதமான ஏதாவது காய்கறி பொரியலில் ஒரு முட்டையை சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
தோசை தவாவை சூடாக்கி மாவு ஊற்றி மிகவும் தடிமனாக இல்லாமல் மெலிதாக வார்க்கவும்.
முட்டை காய்கறி கலவையை தோசையில் ஊற்றி தோசை முழுவதும் சீராக கரண்டியால் பரப்பி விடவும்.
நல்லெண்ணெயை பரவலாக ஊற்றவும். (அதிகம் ஊற்ற வேண்டாம்)
ஒருபக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் சூடாக பறிமாறவும்.