காய்கறி சேன்வெஜ் பரோட்டா
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
துருவிய கேரட் - 1 ல் பாதி
துருவிய பீட்ரூட் - 1 துண்டு
வேகவைத்து ஒன்றிரண்டாக மசித்த பட்டாணி - 1/4 கப்
வேகவைத்து தோலுரித்து மசித்த தக்காளி - 1
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 துண்டு
மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - தேவையான அளவு
கரம் மசாலாதூள் - 4 சிட்டிகை
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணையை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு ஒரு வதக்கு வதக்கி உப்பு சேர்க்கவும்.
பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி எல்லா தூளையும் சேர்த்து நன்கு கிளறவும்.
பின் எல்லா காய்கறிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
கொஞ்ச நேரம் வதக்கி பின் ஆறவைக்கவும்.
பின் முட்டையை அடித்து அதனுடன் காய்கறிகலவையை போட்டு நன்கு கலக்கவும்.
பின் அவற்றை சிறு சிறு ஆம்லேட்களாக வார்த்து எண்ணையை ஊற்றி திருப்பி போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.
ரெடிமேட் பரோட்டா (அல்லது) ஃப்ரோசன் பரோட்டா (அல்லது) கடையில் வாங்கும் பரோட்டாவின் உள்ளே வைத்து உருட்டி சான்ட்விச்சாக சாப்பிட நன்றாக இருக்கும்.