காஞ்சிபுரம் உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

சாம்பார் வெங்காயம் - 10 அல்லது 15

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - ஒரு சிறு துண்டு

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் + நெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு, சீரகம் - சிறிதளவு

மிளகு - 1 தேக்கரண்டி

முந்திரி - 10

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் முந்திரி சேர்த்து சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும்.

2 அல்லது 2 1/2 கப் அளவு நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.

கொதிக்கும் நீரில் ரவையைக் கொட்டி கிளறி மூடிவிட்டு சிறுந்தீயில் வைத்து வேக விடவும்.

குறிப்புகள்:

விரும்பினால் மேலே சிறிது நெய் விடவும்.