காஞ்சிபுரம் இட்லி (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
உளுத்தம் பருப்பு - 150 கிராம்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை - 1 கொத்து
முந்திரிப் பருப்பு - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி வகைகளையும், உளுந்தையும் தனித்தனியே ஊற வைத்து இட்லிமாவுப் பக்குவத்தில் அரைத்து பத்து அல்லது பன்னிரெண்டு மணிநேரம் புளிக்க வைக்கவும்.
வாணலியில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், மிளகு போட்டுப் பொரிந்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போடவும்
பருப்பு சிவக்கும் தருணம் நறுக்கிய முந்திரிப் பருப்பு துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
கடைசியில் பெருங்காயத்தைக் கரைத்த நீர் விட்டு இறக்கி இட்லி மாவில் கொட்டவும்.
தேவையான அளவு உப்புத் தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
இட்லி தட்டுகளின் குழிகளுக்குத் தக்கபடி, வாழை இலை அல்லது மந்தார இலையை துண்டு செய்து இவைகளை லேசாக ஆவியில் அல்லது தணலில் வாட்டி தட்டில் வைத்து ஊற்றி வேக வைக்கவும்.
அல்லது டம்ளர்களில் பாதியளவு மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கலாம். டம்ளர்களில் ஊற்றுவதற்கு முன் எண்ணெய் பூசிக் கொள்ளவும்.