கல் தோசை (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
புழுங்கலரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேற்கூறியுள்ள பொருட்களில் உப்பைத்தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாளன்று அவைகளை மையாக பொங்கப் பொங்க அரைக்கவும்.
பிறகு அதில் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும் புளிக்கவைக்க வேண்டிய அவசியமில்லை.
தோசைக்கல்லில் எண்ணெயைத் தடவி மிதமான அனலில் காயவைத்து அதில் ஒரு கரண்டி மாவை வார்த்து மூடிபோட்டு வேகவிடவும்.
தோசை முழுவதும் வெந்ததும், திருப்பி போடாமல் அப்படியே எடுத்துவிடவும்.
குறிப்புகள்:
இந்த சுவையான தோசைக்கு காரக் குழம்பு அல்லது கார சட்னி பொருத்தமாக இருக்கும்.