கறி அடை (1)
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/4 கிலோ
அரிசிமாவு (பொடிமாவு) - 1 1/2 கப்
தேங்காய்பால் - 1 கப்
முட்டை - 1
இஞ்சி - 2 தேக்கரண்டி
பூண்டு - 2 தேக்கரண்டி
தயிர் - 3 மேசைக்கரண்டி
தக்காளி- 2 சுமாரன அளவு
வெங்காயம் (பெரியது) - பாதி
கருவா- சிறியதுண்டு
ஏலம்- 2
கிராம்பு - 4
தனியாதூள் - 1 தேக்கரண்டி
சோம்புதூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மசலாதூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசிமாவில் தேங்காய்ப்பால் முக்கால் கப் ஊற்றி,முட்டை,சிறிது உப்பு,அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து தனியே ஊறவைக்கவும்.
பின்பு கறியை கழுவி மிகவும் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.கறியில் இஞ்சி 1 தேக்கரண்டி, பூண்டு 1 தேக்கரண்டி, தயிர் 1 1/2 மேசைக்கரண்டி, தக்காளி பொடியாக நறுக்கி போடவும். வெங்காயம் பொடியாக நறுக்கிபோடவும் (சிறிது தாளிப்புக்கு தனியே எடுத்துவைக்கவும்)மசலாதூள், மஞ்சள்தூள், தனியாதூள், சோம்புதூள், சீரகத்தூள், உப்பு, பச்சைமிளகாய் கீறிப்போட்டு வைக்கவும்
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு, போட்டு பொரிந்ததும், மீதியுள்ள இஞ்சி, பூண்டு, தயிர் போட்டு தாளித்து, கருவேப்பிலை, வெங்காயம் சிறிது போட்டு வதக்கி கறியை போட்டு கிளறி கால் கப் தேங்காய்பால் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
கறி நன்கு வெந்ததும் ஒரு தண்ணீர்கூட இல்லாமல் நன்கு வற்றிய உடன் அந்த கறியை எடுத்து அரிசிமாவு கலவையில் சேர்த்து நன்கு பிசைந்துவிடவும் சற்று ஆறியதும் ஒரு தவாவை அடுப்பில் வைத்து ஒன்றைக்குழிக்கரண்டி மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிபோட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வேகவிடவும். தீயை குறைத்துவைத்து வேகவிடவும் வெந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும்