கருப்பு உளுந்து தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருப்பு முழு உளுந்து - 100 கிராம்

பச்சரிசி - 50 கிராம்

புழுங்கல் அரிசி - 400 கிராம்

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசியை சுத்தம் செய்து கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

முதலில் உளுந்தையும், வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு அரைக்கவும். மாவு பொங்கப் பொங்க அரைக்கவும். தண்ணீர் தெளித்து நன்கு அரைத்ததும் மாவை எடுத்துவிட்டு,.

அரிசியைப் போட்டு அரைக்கவும். அரிசி அரைபட்டதும் அரைத்த உளுந்துடன் சேர்த்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும். மறுநாள் தோசை வார்க்கவும்.

குறிப்புகள்: