கம்பு இட்லி (1)
0
தேவையான பொருட்கள்:
கம்பு (சுத்தம் செய்தது) - 1 கப்
புழுங்கலரிசி - 1/2 கப்
உளுத்தம்பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கம்பையும் அரிசியையும் தனித்தனியே சுமார் 3 - 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
உளுந்தையும் சுமார் 3 - 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு, கம்பை நைஸான அரிசி ரவை பதத்தில் அரைத்தெடுங்கள்.
உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க (வெண்ணெய் பதத்தில்) ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்துவையுங்கள்.
7 அல்லது 8 மணி நேரம் புளித்ததும், இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.