கம்பு அடை (1)
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 200 கிராம்
காரட் - 1
முட்டைகோஸ் - 100 கிராம்
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
சோம்பு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரட், முட்டைகோஸ் இரண்டையும் துருவிக் கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குடைமிளகாயை மெல்லியதாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் தூள், சோம்பு தூள், தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும்.
மேலே கூறிய அனைத்தையும் கம்பு மாவுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
தவா சூடானதும் கையளவு பிசைந்த மாவை எடுத்து அடையாக தட்டவும்.எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
அடை தட்டும் போது கையில் தண்ணீர் தொட்டு தட்டினால் அடை ஒட்டாமல் வரும். அடையை மெல்லிய தீயில் வேகவிட வேண்டும்