கடலைமாவு உருளை சப்பாத்தி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

கடலைமாவு - 150 கிராம்

சீரகம் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். அதனுடன் சீரகம் மற்றும் உப்புச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

முக்கால் பாகம் கடலைமாவை எடுத்துக் கொண்டு அதனுடன் உருளை மசியலை கலந்து போதுமான அளவு நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவினை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திப் போல் தேய்த்துக் கொள்ளவும். மீதமுள்ள மாவினைத் தூவி தேய்ப்பதை எளிதாக்கிக் கொள்ளவும்.

ஒரு தோசைக்கல் அல்லது தவாவில் சிறிது எண்ணெய் விட்டு சப்பாத்திகளை ஒவ்வொன்றாய் போட்டு சுட்டு எடுக்கவும். தீயைக் குறவாக வைத்துக் கொள்ளவும். இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: