ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 1 கப்
ரவை - 1/4 கப்
கடலைமாவு - 1/4 கப்
மோர் (கரைப்பதற்கு தேவையான அளவு) – 2 கப்
காரட் - 2 மேசைக்கரண்டி
முட்டைகோஸ் - 2 மேசைக்கரண்டி
குடைமிளகாய் – 2 மேசைக்கரண்டி
தேங்காய்துருவல் - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு (பொடித்தது) - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஓட்ஸையும், ரவையையும் ஒன்றாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
கடலை மாவையும் பச்சை வாசனை போகும்வரை வறுத்து வைக்கவும்.
காரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மெல்லியதாக அரிந்து வைக்கவும்.
தேங்காயை துருவி கொள்ளவும். மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
வறுத்த மாவு கலவைகளை ஒன்றாக உப்பு போட்டு கலக்கவும். அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் போடவும்.
காரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மாவுடன் கலக்கவும்.
ஊத்தாப்பம் பதத்திற்கு கரைத்தவுடன், சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.