ஓட்ஸ் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 1/2 கப்

பாசி பருப்பு - 1 கப்

மிளகு - 2 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை/மல்லி இலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

பச்சைமிளகாய் - 1 பொடியாக நறுக்கியது

செய்முறை:

முதலில் ஓட்ஸை வெறும் வணலியில் வாசம் வரும் வரை வறுக்கவும்.

அதே போல் பாசி பருப்பையும், மிளகையும் சேர்த்து வறுத்து ஆறவைக்கவும்.

பின் இரண்டையும் தனித் தனியாக மிக்சியில் அரைக்கவும்.பருப்பை மட்டும் மிகவும் மாவாக இல்லாமல் சற்று குருணையாக அரைக்கவும்.

பின் மீதி உள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி தோசை மாவை விட கொஞ்சம் தண்ணியாக கரைக்கவும். பின் 15 நிமிடம் கழித்து தோசையாக சுடவும்.

குறிப்புகள்: