ஓட்ஸ் உப்புமா (1)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1/4 கிலோ

வெங்காயம் - 1

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

காரட் - 1

பீன்ஸ் - 5

கோஸ் - சிறிது

இஞ்சி - சிறிய துண்டு

நெய் - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வெங்காயம், மிளகாய், இஞ்சி மற்றும் காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும். ஓட்ஸை நெய் விட்டு வாசனை வர வறுத்து வைக்கவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்து, பருப்புகள் சிவந்ததும் பெருங்காயம் போட்டு அரை நிமிடம் கழித்து நறுக்கி வைத்த வெங்காயம், மிளகாய், உப்பு, இஞ்சி மற்றும் காய்கள் சேர்த்து வதக்கவும்.

காய்கள் வதங்கியதும் கறிவேப்பிலை உருவிப் போடவும். ஒரு நிமிடம் கழித்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

நீர் கொதித்ததும் ஓட்ஸைப் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.

அடுப்பை சிம்மில் வைத்து விடாமல் கிளறி ஓட்ஸ் வெந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்: