எலுமிச்சம்பழ நூடுல்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி நூடுல்ஸ் - 150 கிராம்

எலுமிச்சை பழம் - 2

பச்சை மிளகாய் - 6

கடுகு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

நிலக்கடலை - ஒரு கைப்பிடி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - சிறிது

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

அதில் அரிசி நூடுல்ஸ் போட்டு வெந்ததும் வடிகட்டியில் வடிகட்டவும்

எலுமிச்சை பழத்தினை நறுக்கியவுடன் நீரில் போட்டு லேசாக கழுவி, பின் அதன் சாறு எடுக்கவும். எலுமிச்சை சாற்றில் உப்பினை கலந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நிலக்கடலையை போட்டு சற்று வதக்கி, வறுபட்டவுடன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைப் போடவேண்டும்.

பிறகு நறுக்கிய பச்சைமிளகாய்களைப் போட்டு, பிறகு பெருங்காயத்தையும், மஞ்சள் தூளையும் போட்டு கிளறி எடுத்து ஆறவைத்துள்ள அரிசி நூடுல்ஸில் கொட்டவும்.

இப்போது உப்பு போட்ட எலுமிச்சை சாற்றினை அரிசி நூடுல்ஸில் ஊற்றி, அரிசி நூடுல்ஸ் முழுவதும் சாறும், மஞ்சள் வண்ணமும் பரவும்படி நன்கு கிளறி கொள்ளவும். இறுதியில் சிறிது கொத்தமல்லித் தழையை தூவி விடவும்.

குறிப்புகள்: