ஊத்தப்பம் (1)
தேவையான பொருட்கள்:
கனமான அவல் - 1 கப்
தயிர் - 2 கப்
பச்சரிசி - 3 கப்
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும் அவலையும் கலந்து, நீர்ல் நன்றாக களைந்து, பிறகு நீரை வடித்து விட்டு, தயிரில் ஊற வைக்கவும்.
சுமார் இரண்டு மணி நேரங்கள் கழித்து எடுத்து நைசாக அரைத்து, தேவையான உப்பு போட்டு கரைத்து குறைந்தது 12 மணி நேரம் புளிக்க விடவும்.
ஊத்தப்பம் பஞ்சு போல் மென்மையாக வருவதற்கு நன்கு புளிக்க வேண்டும்.
ஊத்தப்பம் வார்க்கும் முன்பு சோடா உப்பினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் தடவி விட்டு, நன்றாக கலந்த மாவை ஒரு கரண்டி விட்டு, கரண்டியை நடுவில் சில விநாடிகள் வைக்கவும். மிகவும் பரத்த வேண்டாம்.
நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாயினைக் கலந்து பச்சையாகவோ அல்லது லேசாக வதக்கியோ தோசை மேல் தூவவும்.
ஒரு தேக்கரண்டி எண்ணெய்யை சுற்றிலும் விட்டு, ஊத்தப்பம் மீதும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
திருப்பிப் போட வேண்டிய அவசியம் இல்லை. வெந்த பிறகு அப்படியே எடுத்து, விருப்பப்பட்ட சட்னியுடன் பரிமாறவும்.