உப்புமா (2)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

வரமிளகாய் - 4

கடுகு - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் - 100 மி.லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காய பவுடர் சேர்த்து தாளிக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரிசி மாவை சேர்த்து லேசாக வறுக்கவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு மாவிற்கு 2 பங்கு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கொதிக்கும் தண்ணீரை தாளித்துள்ள கலவையில் மெதுவாக ஊற்றிக் கொண்டே கிளறவும்.

கட்டி தட்டாமல் கிளற வேண்டும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை சிம்மில் வைத்து கடாயை 5 நிமிடம் மூடி வைக்கவும். இடையிடையே கிளறிவிடவும். தொட்டால் கையில் ஒட்டாமல் இருந்தால் இறக்கி வைக்கவும்.

குறிப்புகள்:

இந்த உப்புமாவிற்கு எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும்.