உப்புமா
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தேங்காய் - 4 தேக்கரண்டி
கடுகு, சீரகம் - தாளிக்க
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
இதில் உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் (விதை நீக்கியது), கறிவேப்பிலை சேர்த்து சிவக்க விடவும்.
பின் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுத்து, தண்ணீர் 2 (அல்லது) 2 1/2 கப் சேர்க்கவும்.
தண்ணீர் நன்றாக கொதி வந்ததும், கிளரி கொண்டே ரவையை மெதுவாக சேர்க்கவும். சிறுந்தீயில் மூடி போட்டு வேக வைத்து கிளரி எடுக்கவும்.