உடனடி கோதுமை தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு -1 கப்

இட்லி மாவு -1 குழிகரண்டி

எண்ணை - சுடுவதற்கு தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமைமாவுடன், இட்லிமாவு சேர்த்து தேவையான உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு தோசைமாவு பதம் கரைக்கவும்.

தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊற்றி பரத்திவிட்டு,சிறிது எண்ணை விடவும்.மேலே வெந்தவுடன் தோசையை திருப்பிவிட்டு தேவையானால் எண்ணைவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்:

தோசைக்கல்லில் முதலில் எண்ணைதடவ கூடாது. முதலிலேயே எண்ணை தடவினால் தோசை பரத்திவிடவராது.

இந்த தோசைக்கு,சட்னி நன்றாக இருக்கும்.