ஈசி ப்ரெட் உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் - 4 துண்டுகள்

வெங்காயம் - 1

தேங்காய் துருவல் (விரும்பினால்) - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 1

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)

மஞ்சள் தூள் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ப்ரெட்டை துண்டுகளாக்கி மிக்சியில் இட்டு பொடிக்கவும். (ப்ரெட்டை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுலபமாக இருக்கும்).

வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வெங்காயத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பொடித்த ப்ரெட் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். (அதிக நேரம் சூடாக்கினால் உப்புமா மிகவும் வறண்டுவிடும்).

தேங்காய் துருவல் சேர்த்து கிளறி உடனே இறக்கி விடவும்.

குறிப்புகள்:

வெங்காயம் வதக்கும் போது துருவிய கேரட், வேக வைத்த பட்டாணி சேர்த்து வதக்கியும் செய்யலாம்.

விரும்பினால் சிறிதளவு பெருங்காயம் சேர்க்கலாம்.

ப்ரெட்டில் உப்பு இருப்பதால் வெங்காயத்திற்கு தேவையான அளவு மட்டும் உப்பு சேர்த்தால் போதும்.