இலை அடை
தேவையான பொருட்கள்:
ஊறவைத்து மிக்சியில் பொடித்த அரிசி மாவு - 2 கப்
துருவியதேங்காப்பூ - 2 மூடி
வெல்லம் - 2 கப்
பலாச்சுளை - 15
ஏலம் பொடி - ஒரு தேக்கரண்டி
வாழை இலைத்துண்டுகள். - 15
நெய் - ஒரு கிண்ணம்
செய்முறை:
அரிசி மாவை கொதிக்கும் நீரூற்றி கரண்டியால்கிளறி, கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பலாச்சுளையை பொடிசாக நறுக்கி குக்கரில் குழைய வேக விடவும்.
கடாயில் நெய் ஊற்றிவெந்த பலாச்சுளைகளை ஒருகப் வெல்லம் சேர்த்துஜாம் பதத்தில்கிளறி இறக்கவும்(இது,சக்கப்பிரதமன்)
தேங்காபூ,வெல்லம் சேர்த்து சுருளக்கிளறி பூரணம் தனியாகத்தயார் செய்துசக்கப்பிரதமனையும் அத்துடன் சேர்த்து ஏலப்பொடிதூவி கலந்து வைக்கவும்.
வாழை இலையில் நெய்தடவிஅரிசிமாவை வட்டமாகத்திரட்டவும்.
நடுவில் பூரணம் வைத்து இலையைப்பாதியாக மடித்து இட்லிதட்டில்வைத்துஆவியில் 10, 15 நிமிடங்களுக்கு வேகவிடவும். இலையுடனேயே பரிமாறவும்.