இனிப்பு ப்ரட் சாண்ட்விச்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ப்ரட் துண்டுகள் - 4

பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி

பனங்கல்கண்டு - 1 தேக்கரண்டி

தேன் - 3 தேக்கரண்டி

பேரிச்சம் பழம் (பொடி பொடி சதுரமாக வெட்டிக்கொள்ளவும்) - 2

முந்திரி பருப்பு (நெய்யில் வறுத்தது) - 3

உலர்ந்த திராட்சை - 10

செர்ரி - 2

தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி

செய்முறை:

முந்திரி பருப்பு, பொட்டுக்கடலை, பனங்கல்கண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும்.

அதனுடன் தேன் சேர்த்து ஜாம் போன்று பேஸ்ட் ஆக்கவும்.

பேரிச்சம் பழத்தை (ப்ளம் கேக்கில் உள்ள கலர் கலர் செர்ரி சைஸ்)சதுரமாக நறுக்கி அதை முந்திரி வறுத்த நெய்யில் போட்டு வறுக்கவும். (கறுகக் கூடாது)

ப்ரட்டின் மேல் பொட்டுக்கடலை ஜாமை தடவி அதில் பேரிச்சை, உலர்ந்த திராட்சை , தேங்காய் துருவல் தூவி மேலே மற்றொரு ப்ரட்டை வைத்து மேலே செர்ரியை வைத்து அதன் மேல் ஒரு டூத் பிஃக்கை சொருகி பறிமாறவைக்கவும்.

குறிப்புகள்: