இனிப்பு தோசை (1)
0
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 1 கப்
அவல் - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் - 1/4 கப்
ஏலக்காய் - 3
செய்முறை:
அரிசி, அவல் மற்றும் வெந்தையத்தை 1 மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
மிதமான தீயில் வைத்து தோசையாக வார்த்தெடுக்கவும்.
குறிப்புகள்:
இந்த தோசையை வெண்ணை அல்லது நெய்யில் சுட்டால் சுவை அதிகமாக இருக்கும்.