இனிப்பு அடை
0
தேவையான பொருட்கள்:
ரவை - 200 மில்லி
அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
தேங்காய் பால் - 1 டின்
முட்டை - 1
சீனி - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ரவையை லேசாக வறுத்துக்கொள்ளவும். பின் ரவையில் அரிசி மாவு, தேங்காய் பால் ஊற்றி நன்கு பிசைந்து முட்டையை அடித்து ஊற்றி நன்கு கலக்கி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் 2 மணி நேரம் கழித்து சீனியை சேர்த்து கலக்கி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் பொறிக்கும் சட்டியை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி நெய் ஊற்றி ஒரு குழிக்கரண்டி அளவு மாவை எடுத்து ஊற்றி சுற்றிவர இன்னும் 1 தேக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி தீயை மிதமானதாக வைத்து சுட்டு எடுக்கவும். ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போட்டு பொறிய விடவும்.