இந்தோனேஷியன் புட்டு
0
தேவையான பொருட்கள்:
புட்டு மாவு - 1 கப்
ரம்பை இலை - 4
மாவில் உப்பு சேர்க்க படவில்லையெனில் - தேவையான அளவு உப்பு
தேங்காய் துருவல் - 1 கப்
செய்முறை:
ரம்பை இலையை தண்ணீர் விட்டு அரைத்து ஜூஸை வடிகட்டி எடுக்கவும்.
புட்டு மாவில் முதலில் இந்த ஜூஸை விட்டு நன்றாக பிசிறி விடவும்.
பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கைகளால் உதிர்த்து பிசையவும்.
பிசைந்த மாவு உதிர் உதிராக, ஆனால் பிடித்தால் பிடிக்க வர வேண்டும்.
புட்டு குழாயில் முதலில் தேங்காய் பின்னர் மாவு என மாற்றி மாற்றி போட்டு புட்டு பானையில் வேக வைக்கவும்.
புட்டு குழாயின் மேல் ஆவி வந்ததும் எடுத்து வெல்லம் அல்லது சர்க்கரையுடன் பரிமாறவும்.