இட்லி (2)

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 4 டம்ளர்

பச்சரிசி - 1 கைப்பிடி

உளுத்தம் பருப்பு - 3/4 டம்ளர்

ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 3 தேக்கரண்டி

வெள்ளை சோயா - 1/2 கைப்பிடி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகவும்; உளுத்தம் பருப்பு, ஜவ்வரிசி, வெந்தயம், சோயா ஒன்றாகவும் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஊற வைத்த உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, சோயா, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு வெண்ணெய் பதத்தில் கெட்டியாக அரைக்கவும்.

அரைத்து எடுத்த பின் ஊற வைத்த புழுங்கல் அரிசி, பச்சரிசியை போட்டு நைசாக வெண்ணெய் பதத்தில் அரைக்கவும்.

உப்பு சேர்த்து கரைத்து 8 - 12 மணி நேரம் புளிக்க விடவும்.

புளித்த பின் இட்லியாக ஊற்றலாம்.

குறிப்புகள்: