இட்லி மாவு முட்டை குழிப்பணியாரம்
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 1/2 கப்
முட்டை - 2
மிளகாய் - 2
மல்லி கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மூட்டையுடன், உப்பு கட் செய்த மிளகாய், வெங்காயம், மல்லி கறிவேப்பிலை சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
பின்பு அத்துடன் இட்லி மாவை சேர்த்து குழிப்பணியார சட்டியில் எண்ணெய் தடவி, மாவு முட்டை கலவை ஸ்பூனால் விட்டு திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும். குறிப்பு: புசு புசு என்று அமுங்காமல் டேஸ்டாக இருக்கும்.