இட்லி உப்புமா (4)
தேவையான பொருட்கள்:
இட்லி - 10 அல்லது தேவையான அளவு
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு துண்டு
எலுமிச்சைப்பழம் - 1/2 மூடி
கொத்துமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கவும்
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, வற்றல்,மஞ்சப்பொடி எல்லாவற்றையும் வதக்கவும்.
இட்லி, உப்பு துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, எலுமிச்சைப்பழம் பிழிந்து இறக்கவும்.