இட்லி உப்புமா (1)
0
தேவையான பொருட்கள்:
இட்லி - 4
வெங்காயம் - 1
காய்ந்தமிளகாய் - 2
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
எண்ணை - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு -1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இட்லியை உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம் ,மிளகாய் நறுக்கிவைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு,பருப்புகளை போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.மிளகாய்,கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
உதிர்த்த இட்லியை போட்டு மஞ்சள்பொடி,சிறிது உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும்.